• Thu. Jan 23rd, 2025

இது ஜோக்கா? -கோபத்தில் வெங்கட் பிரபு

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஸ்மித்தின் மனைவியின் உருவம் பற்றி கேலி செய்ததற்காக, கிரிஸ் ராக்கை, வில் ஸ்மித் மேடையில் வைத்து முகத்தில் ஓங்கி குத்தினார். பிறகு அவரை எச்சரித்து விட்டும் சென்றார். பேசியதற்காக தான் கிரிசை, ஸ்மித் தாக்கி உள்ளார். இந்த செய்தியை வெளியிட்ட பல மீடியாக்கள், கிரிஸ் ராக், மேடையில் விளையாட்டாக ஸ்மித்தின் மனைவி பார்ப்பதற்கு GI Jane 2 போல இருப்பதாக கூறியதாக குறிப்பிட்டிருந்தன.

ஆனால் உண்மையில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் ஸ்மித், 2018 ம் ஆண்டு முதல் Alopecia என்ற நோயால் பாதிக்கப்பட்டு தனது தலைமுடிகளை இழந்துள்ளார். இதை வெளிப்படையாக அறிவித்த ஜடா, நோயின் தீவிரத்தால் முடிகளை இழந்து மொட்டை தலையுடன் இருக்கும் வீடியோவையும் பகிர்ந்திருந்தார். தற்போது வரை மொட்டை தலை தோற்றத்துடன் தான் இருக்கிறார். இதனை கேலி செய்வதை போல் கிரிஸ் பேசியதாலேயே, கோபத்தில் ஸ்மித் அவரை தாக்கி உள்ளார்.

இந்த செய்தியை பார்த்த டைரக்டர் வெங்கட் பிரபு, இது வேடிக்கையான, ஜோக்கிற்கான விஷயமா. ஆஸ்கார் விழாவில் ஸ்மித்தின் மனைவிக்கு கண்டறியப்பட்ட நோய் பற்றி பேசுவது விளையாட்டா. ஆஸ்கார் விழாவில் அது பற்றி பேசுவது நன்றாக இருக்கிறது என நினைக்கிறீர்களா என மிக கடுமையாக கேள்வி எழுப்பி உள்ளார்.