• Fri. Mar 31st, 2023

நயன்தாராவுக்கு அடுத்த வருடம் டும் டும் டும்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்துக்கொண்டும் சில படங்களில் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளார்

இவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த 2015 -ஆம் ஆண்டு நானும் ரௌடி தான் படத்தின் மூலம் காதல் ஏற்பட்டது. கடந்த 7 வருடங்களாக காதலித்து வரும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ள சில படங்களில் மட்டும் நடித்து விட்டு நடிப்பதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் நிறைய சிறிய படங்களை தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.

இவர்கள் இருவரும் உடனடியாக திருமண செய்ய வேண்டும் என விக்னேஷ் சிவனின் தாயாரும், நயன்தாராவின் தாயாரும் விரும்புகிறார்களாம். இதனால் அடுத்த வருட ஆரம்பத்தில் கட்டாயமாகத் திருமணம் நடைபெற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *