• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மேற்கு வங்கத்தின் பெயர் மாற்றப்படுகிறதா…???

Byகாயத்ரி

Jul 20, 2022

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற கடந்த சில ஆண்டுகளாக அம்மாநிலத்தை ஆட்சி செய்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முயற்சித்து வருவதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசிய போது மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்ற மாநில அரசிடமிருந்து கோரிக்கை வந்திருப்பதாக தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பெங்காலி இந்தி ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ‘Bangla’ என அழைக்கும் விதமாக மாற்றக்கோரி மாநில அரசிடம் இருந்து கோரிக்கை வந்திருப்பதாக உள்துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மேற்கு வங்க மாநிலம் விரைவில் ‘Bangla’ என மாற்றப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.