• Wed. Apr 24th, 2024

கேரளாவில் 300 பன்றிகளை அழிக்க முடிவு

ByA.Tamilselvan

Jul 22, 2022

இந்தியாவில் பீகார்,கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பன்றிகளுக்கு வரும் ஆப்பிரிக்க பன்றிகாய்ச்சல் பரவிவருகிறது. கேரளாவில் 300 பன்றிகளை அழிக்க அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை முடிவு செய்துள்ளது.
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்பது வீட்டுப் பன்றிகளை பாதிக்கும் மிகவும் தொற்று மற்றும் ஆபத்தான வைரஸ் நோயாகும். இந்நிலையில், கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடியில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கேரள கால்நடை பராமரிப்புத் துறையின் அதிகாரி கூறியதாவது:- பண்ணை ஒன்றில் பன்றிகள் மொத்தமாக இறந்துக்கிடந்ததை அடுத்து மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது பண்ணையில் உள்ள 300 பன்றிகளை அழிப்பதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *