• Sat. Apr 20th, 2024

“டேண்டீ” மீது அரசின் கவனம் திரும்புகிறதா??

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்துக்கு சொந்தமான 5315 ஏக்கர் பரப்பளவிலான தேயிலை தோட்டங்களை வனத்துறை கையப்படுத்தும் அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் அ.தி.மு.க., தரப்பு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் டேண்டீ தொழிலாளர்களின் நலன் குறித்து ஆலோசனை நடந்து வருவது நல்ல முன்னோட்டமாக பார்க்கபடுகிறது.

கடந்த 1987ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழ் மக்களுக்காக அன்றைய ஆட்சியில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களால் தேயிலைத் தோட்டங்கள் நிறுவப்பட்டது.

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் சார்பில் நடத்தப்பட்டு வந்த அந்த தேயிலை தோட்டங்கள் மற்றும் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் நல்ல லாபம் ஈட்டி வந்தனர். இதனால் கூடலூர், கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளிலும் டேன்டீ தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

காலப்போக்கில், சில நிர்வாக சீர்கேடுகளால், தேயிலை தோட்டம் மற்றும் தேயிலை தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி தாயகம் திரும்பிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தேயிலை தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க முடிவு எடுத்து உள்ள நிலையில், அங்கு பணிபுரிந்த 3000 தற்காலிக பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிப்பிற்குள்ளானார்கள்.

இந்நிலையில் கடந்த (03-10-2022) அன்று தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது அதில் சுமார் 5315 ஏக்கர் டேண்டீ நிர்வாகத்த்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைக்க கோரி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இந்த அரசாணை மூலம் இங்கு வாழும் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் அவர்களது எதிர்காலமே பாதிக்கபடும் சூழல் உருவாகியுள்ளது.

இதனிடையே தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக வளர்ச்சி பணிகள் மற்றும் தொழிலாளர் நலன் குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அண்ணன் கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் ஆ.ராசா அவர்கள் தலைமையில் வனத்துறை முதன்மை செயலாளர் திருமதி சுப்ரியா சாகு I.A.S,கூடுதல் தலைமை வன பாதுகாவலர், TANTEA பொது மேலாளர் ஆகியோருடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை, கூட்டத்தில்
கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மு.திராவிடமணியும் பங்கேற்றார்.

இதே போல் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் கலந்துரையாடினார்.

இதனால் டெண்டீ தொழிலாளர்களின் பிரச்சினை தமிழக அரசு மூலம் தீர்வு ஏற்படுமா?? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *