• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்குகிறதா டாஸ்மாக்?

Byகுமார்

Sep 17, 2021

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தான் அதிக வருமானம் தருவதாகவும், அதனால் தான் டாஸ்மாக் கடைகளை திறப்பதில் அரசு ஆர்வம் காட்டி வருவதாகவும் பலரும் கூறிவந்தனர். குறிப்பாக கொரோனா பரவல் காலத்திலும் கூட கடைகள் திறக்கப்பட்டு, தமிழக அரசு வருமானம் ஈட்டி வந்தது. என்று நாம் நினைதுவந்தோம். ஆனால் உண்மை வேறு மாதிரி உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், தமிழகத்தில் 5 ஆண்டுகள் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னையை சேர்ந்த காசிமாயன் என்பவர் டாஸ்மாக் விற்பனை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு தமிழக அரசு அளித்த பதிலின்படி, 2010-11ல் ரூ.3.56 கோடி, 2011-12ல் ரூ.1.12 கோடி, 2012-13ல் ரூ.103.64 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2013-14ல் ரூ.64.44 கோடி, 2019-20 நிதியாண்டில் ரூ.64.44 கோடிக்கு டாஸ்மாக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக பதிலளிக்கப்பட்டுள்ளது.