• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஜப்பான் மீது போர் தொடுக்கிறதா வடக்கொரியா..??

Byகாயத்ரி

Oct 5, 2022

வடகொரியா அவ்வபோது ஏவுகணை சோதனைகள் செய்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது. இதுவரை பல சோதனைகளை செய்து வரும் வடகொரியா போர் தொடுக்க போவதாக பேச்சு அடிபடுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது.
சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா கடந்த 10 நாட்களுக்குள் 5 முறை பாலிஸ்டிக் உள்ளிட்ட அபாயகரமான ஏவுகணைகளை சோதனைக்குள்ளாக்கியுள்ளது. இதனால் அண்டை நாடான ஜப்பான் மீது வடகொரியா போர் தொடுக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு ஜப்பான் அரசு எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் அபாயம் காரணமாக ஜப்பானில் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளிடையே அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.