• Fri. Dec 13th, 2024

நயன்தாரா பெரிய நடிகையா..?? இவங்க லிஸ்ட்லயே இல்லையே.. மாட்டிக்கொண்ட கரண் ஜோகர்…

Byகாயத்ரி

Jul 26, 2022

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் கரன் ஜோகர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகர் யாரென்று கேள்வி கேட்டார். அதற்கு சமந்தா தென்னிந்திய சினிமாவில் நயன்தாரா தான் பெரிய நடிகை என்று கூறினார். உடனே கரண் ஜோகர் நாங்கள் நடத்திய கருத்து கணிப்பு பட்டியலில் நயன்தாரா பெயர் இல்லை என்று அவரது பேச்சு சர்ச்சைக்குள்ளானது. நயன்தாரா ரசிகர்கள் தற்போது கரண் ஜோகருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அதனை தொடர்ந்து கரண் ஜோகர் யார் என்றும் இந்தியில் தயாரான குட்லக் ஜெர்ரி படம் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் என்பது உங்களுக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்பினர். அதுமட்டுமில்லாமல் நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா நடிகைகள் தென் இந்தியாவில் உள்ளனர் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தென்னிந்திய திரை உலகம் மீது கரண் ஜோகருக்கு எப்போதுமே பொறாமை உண்டு என்று பலர் கண்டித்து வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். மேலும் இவரின் சர்ச்சை கருத்து தற்போது பரபரப்பாகி உள்ளது.