• Fri. Mar 29th, 2024

ஜாதிக்கட்சி தொடங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி?

சசிகலா அதிமுகவிற்கு மீண்டும் வந்தால் எடப்பாடி பழனிச்சாமி இருப்பாரா? அவரது நிலை இப்போது எப்படி இருக்கிறது? மற்ற அமைச்சர்கள் அமைதி காப்பது ஏன்? அவர்கள் சசிகலா வருகை எதிர்பார்க்கிறார்களா அல்லது ஏற்றுக் கொள்கிறார்களா? என்கிற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரும் எழுந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் சசிகலா அதிமுகவில் இணைவதையும் வரவேற்பதையும் விரும்பவில்லை. ஆனால் பெரும்பாலான தொண்டர்களின் எண்ணம் சசிகலாவின் கீழ் அதிமுக வர வேண்டும் என்பதாகவே உள்ளது.

தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியது போல ஒவ்வொரு மாவட்டத்திலும் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றக் கூடும். சசிகலாவை ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசியதாகவும் தகவல் வெளி வருகின்றன. அப்படியிருக்கும் போது இதற்கு நேர் எதிராக எடப்பாடி பழனிச்சாமி, எஸ். பி வேலுமணி, சி.வி சண்முகம் உள்ளிட்டோர் என்ன செய்வார்கள்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சசிகலாவை வருகையை எதிர்ப்பது அல்லது ஏற்பது. சசிகலா வருகையை ஏற்றாலும் தினகரன் வருகையை எப்படி பழனிச்சாமி உள்ளிட்டோர் நிச்சயம் ஏற்க மாட்டார்கள்.

அப்படி என்றால் கட்சி இரண்டாக பிரியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது, டிடிவி தலைமையில் ஒரு அணியாகவும் சசிகலா ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியாகவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மூன்றாவது அணியாக அமைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அதிமுகவின் நிலைமை முக்குலத்தோர் மற்றும் கவுண்டர்கள் பெரும்பான்மை உள்ளவர்களாக தான் உள்ளது. பொது மக்களின் ஓட்டுகள் மாறும் என்பதால் அதனை பெரிதாக எடுத்து கொள்வது கிடையாது. தற்போது எடப்பாடி இருக்கும் வாய்ப்புகளில் மீண்டும் சசிகலாவை கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை, ஆனால் சசிகலா உறுதியாக பாஜக உதவியுடன் உள்ளே வரும் பட்சத்தில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா பக்கம் வந்து விடுவார். அன்று சசிகலாவை வசைபாடிய மாஜிக்கள் ஒதுக்கப்படும் போது பெரும்பான்மையான முக்குலத்தோர் வாக்குகள் சசிகலாவிற்கு ஆதரவாக தான் முடியும். ஆனால் அதிமுகவின் கொங்கு பெல்ட் அப்படி அல்ல அது எந்த நிலையிலும் மாறக்கூடியது. ஆனால் சட்டமன்றத் தேர்தலில் தென் தமிழகம் அதிமுகவின் காலை வாரிய போது கூட மேற்கு மண்டலமான கொங்கு மண்டலம் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்தது.

தற்போது அந்த எண்ணத்தில் அதிமுக தமக்கு சரியாக வரவில்லை என்றால் தன்னை கவுண்டர் சமுதாய மக்கள் கைவிட மாட்டார்கள் அவர்களுக்காக உழைக்காமல் வேறு யாருக்காக உழைக்கபோகிறேன் என்று ஜாதி கட்சி தலைவராக உருவாகவும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் கொங்கு வட்டாரத்தை சேர்ந்தவர்கள். பெரும்பான்மை செல்வ வளம் பொருந்திய கொங்கு மண்டலத்தில் மணி சகோதரர்கள் கிட்ட தட்ட கை கழுவும் நிலையில் உள்ளனர். அது வெளிப்படையாக தெரிவதற்கு முன்பே இது போன்ற திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருவதாக தகவல். இல்லையென்றால் தனது சுய லாபத்திற்காக எடப்பாடி பழனிசாமி நிச்சயம் மனம் மாறுவார் என்கிறார்கள். அப்படி மாறவில்லை என்றால் கவுண்டர்கள், தேவர்கள் என அதிமுக உடையலாம். ஆனாலும், அதற்கு வாய்ப்பு இருக்காது என்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *