
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் மெஹ்ரா(19) எனும் இளைஞன் பரோலாவில் தனது சகோதரருடன் வசித்து வருகிறார்.
நொய்டாவின் செக்டார் 16-ல் பணிபுரியும் இவர், தினமும் வேலையை முடித்துவிட்டு, 10 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள தனது வீட்டுக்கு ஓடுயே செல்கிறார். இப்படியே நாளும் போக, நேற்றும் இதே போல் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு ஓடிக்கொண்டிருக்கையில், பிரபல எழுத்தாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான வினோத் காப்ரி அவர் பார்த்திருக்கிறார். சாலையில் அவரை பார்க்க, காரில் ஏறிக்கொள்ளும்படி வினோத் காப்ரி கேட்டும் தனது லட்சியத்திற்காக வேணாம் என கூறிய உரையாடல் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
This is PURE GOLD❤️❤️
— Vinod Kapri (@vinodkapri) March 20, 2022
नोएडा की सड़क पर कल रात 12 बजे मुझे ये लड़का कंधे पर बैग टांगें बहुत तेज़ दौड़ता नज़र आया
मैंने सोचा
किसी परेशानी में होगा , लिफ़्ट देनी चाहिए
बार बार लिफ़्ट का ऑफ़र किया पर इसने मना कर दिया
वजह सुनेंगे तो आपको इस बच्चे से प्यार हो जाएगा ❤️😊 pic.twitter.com/kjBcLS5CQu