ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் டில்லி வந்தடைந்தது.இதனை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து 29 இந்திய சிலைகள் உட்பட பழங்கால பொருட்களை மத்திய அரசு மீட்டுள்ளது. இதில், சீர்காழி அருகே பழங்கால கோவிலில் இருந்த ஞானசம்பந்தர் சிலைகளும் அடங்கும். மற்றவைகள் ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவை.ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு இந்தியா கொண்டுவரப்பட்ட 29 பொருட்களும் சிவன், சக்தி, விஷ்ணு, ஜெயின் பாரம்பரியம், உருவப்படங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் என ஆறு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த பழங்கால பொருட்களும் மணற்கல், பளிங்கு, வெண்கலம், பித்தளை, காகிதம் போன்ற பொருட்களால் செய்யப்பட்டுள்ளன. இந்த பொருட்களை இன்று (மார்ச் 21) பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இந்தியா – ஆஸ்திரேலியா இருதரப்பு உச்சி மாநாடு இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.