• Tue. Jun 30th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் 108 திருவிளக்கு பூஜை..,

ByK Kaliraj

Jun 30, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இக்கோவிலில் மாதம் தோறும் பௌர்ணமி தினத்தன்று திருக்கோவில் சார்பில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆனி மாத பௌர்ணமி தினத்தையொட்டி திருக்கோவிலில் உள்ள கொழுமண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

அதற்கு முன்னதாக அம்மனுக்கு பௌர்ணமி தின சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தில் பால் பன்னீர் ஜவ்வாது சந்தனம் திரவியம் விபூதி இளநீர் உள்ளிட்ட 21 வகையான திவ்ய பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் தென்காசி தென்மலை சங்கரன்கோவில் உன்கிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு சேலை குங்குமச்சிமிழ் காமாட்சி விளக்கு மற்றும் பூஜை பொருட்கள் என பல்வேறு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன . விளக்கு பூஜையை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் இந்த விளக்கு பூஜையின் போது பாடப்பட்ட அம்மன் பாடலுக்கு பெண்கள் அருள் வந்து ஆடினர். பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவிலில் நடைபெற்றது.