• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கிய எஸ்.பி. வேலுமணி..,

BySeenu

Jun 30, 2026

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இருக்கும் புகைப்படங்களை தனது அனைத்து சமூக வலைதள பக்கங்களிலிருந்தும் நீக்கி, புதிய ப்ரொபைல் புகைப்படத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாற்றியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் பேசிய வீடியோவும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விமான நிலையத்தில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எஸ்.பி. வேலுமணி எது நடந்தாலும் நானே தெரிவிக்கிறேன் என விமான நிலையத்தில் பதிலளித்துள்ளார்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியிடம், சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிச்சாமியுடன் இருந்த புகைப்படங்களை நீக்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எதுவாக இருந்தாலும் உங்களிடம்தான் சொல்வேன். நீங்கள்தான் பிளாஷ் நியூஸ் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதிமுக இருக்கக் கூடாது என்பதுபோல் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. எதுவாக இருந்தாலும் உங்களிடம் தெரிவிப்பேன்” என்று கூறினார்.