• Wed. Sep 30th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி ஏற்படுத்த வலிறுத்தி ஆர்ப்பாட்டம்..,

ByPuthar Pandian P

Jun 30, 2026

தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியம் ஜம்புதுரைக் கோட்டை ஊராட்சியில் உள்ள சக்கைய நாயக்கனூர் குடிநீர் சாக்கடை வசதி தெரு விளக்கு வேகத்தடை உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சக்கைய நாயக்கனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் சசிகலா தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் துர்க்கை ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஆனந்த குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் பாபு, பொதுச் செயலாளர் தேவேந்திரன் இணை பொதுச் செயலாளர் சுரேஷ் பெரியசாமி உட்பட பலர் பேசினார்கள், மேலும் சங்க நிர்வாகிகள் ராஜ்கமல், பிரபு, மாடசாமி ராமர் மற்றும் சக்கைய நாயக்கனூரைச் சேர்ந்த 50க்கு மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் கலந்து கொண்டனர்.

அங்கு நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி திட்ட அலுவலர் குமாரவேலு, கிராம நிர்வாக அலுவலர் கலா மற்றும் அலுவலர்கள் நேரில் வந்தனர். அதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் அதன் பிறகு ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது தலைமை யில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.