• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

ஊரணியை மீட்டெடுப்பதோடு, பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்..,

ByP.Thangapandi

Jun 30, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கிராமத்தில் பெருமாள் கோவில் ஊரணி என்ற பெயரில் ஊரணி இருந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 7 செண்ட் பரப்பரவு கொண்ட இந்த ஊரணி இக்கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த சூழலில், சில வருடங்களுக்கு முன் இந்த ஊரணிக்கான நீர்வரத்து குறைந்துவிட்டதாக சீரமைக்கப்படாமல் இருந்ததாகவும்.,

கடந்த சில ஆண்டுகளில் அதே ஊரைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்ததுடன், அதற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் பட்டாவும் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பட்டாவாக மாறிய ஊரணி பகுதியில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெறுவது குறித்தும், ஊரணியை மீட்டெடுக்க கோரி உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், உசிலம்பட்டி வட்டாச்சியர் கார்த்திகேயனிடம் ஊரணியை காணவில்லை என கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனடியாக வட்டாச்சியரும், சம்மந்தப்பட்ட வருவாய் அலுவலர்களுடன் ஊரணி இருந்த இடத்திற்கு நேரில் வந்து அளவீடு செய்து ஊரணியை மீட்டெடுப்பதோடு, பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாக கூறப்படுகிறது.