• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இறையன்பு ஐ.ஏ.எஸ்!.. அருமையான பதிவு

Byவிஷா

Oct 9, 2021

இன்றைய இளம் வயதினர் சிலருக்கு கணினியை இயக்குவது நன்றாகத் தெரிகிறது.
ஆனால் பயன்படுத்திய போர்வையை மடித்து வைக்கத்தான் தெரியவில்லை.!!!

கைப்பேசி அழைப்புகளை அவ்வப்போது சுத்தம் செய்யத் தெரிகிறது.
ஆனால் சாப்பிட்ட பிறகு தட்டை கழுவி வைப்பதுதான் கடினமாக இருக்கிறது!!!.

ஆன்லைனில் பயணத்திற்குப் பதிவு செய்யும் வித்தை தெரிகிறது.
எதிரே அமர்ந்திருக்கும் பயணியைப் பார்த்து புன்னகைக்கத்தான் தெரிவதில்லை!!!.

வாட்ஸ்அப் குரூப்பில் அன்பு சொட்டச்சொட்ட நண்பர்களிடம் தகவல் பரிமாற முடிகிறது.
சொந்தப் பெற்றோரிடம் தூக்கியடிப்பது போல பேசத்தான் முடிகிறது!!!.

எந்த இடத்திலும் ஒரு நிமிடம் தாமதமானால் கோபம் கொப்பளித்துக் கொள்கிறது.

ஆனால், அவர்களுக்காகக் காத்திருக்கும் பெற்றோரின் வலி புரிவதில்லை.!!!

எதைப் பெற்றாலும் உரிமையென எண்ணும் அவர்களுக்கு கடமைகளும் இருக்கின்றன என்பது ஒருபோதும் உரைப்பதில்லை.!!!