• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பருவமழை முன்னேற்பாடு மேற்பார்வையிட ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமனம்

Byமதி

Nov 9, 2021

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட ஐ.பி.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகரில் பருவமழை முன்னேற்பாடு பணிகளை மேற்பார்வையிட ஆணையர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோலவே காஞ்சிபுரத்தல் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, வேலூரில் கூடுதல் டிஜிமி அமரேஷ் பூஜாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று காலை சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை தொடர்பான பாதிப்புகளை கண்காணித்து உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.