

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், மீட்புப்பணி தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எழிலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அடுத்தடுத்த நாள்களில், அதிகனமழை பெய்யக்கூடும், நவ.9,10,11ஆம் தேதிகளில் மிகவும் எச்சரிக்கை தேவையென என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தன்னார்வ நிறுவனங்கள் பொதுமக்களுக்கு உதவ களத்திற்கு வர வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக்கொள்கிறேன். வரும் 10ஆம் தேதி அதிகனமழை பெய்தால் எதிர்கொள்ள கூடுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடலோர மாவட்டங்களில் முகத்துவாரங்களின் அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
பிரதான நீர் வழித்தடங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தற்போதுவரை சென்னையில் 16 சுரங்கப் பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்ததால் மழை நீரை வெளியேற்றுவதில் சிக்கல் உள்ளது. அதற்கான வழிகளையும் கண்டறிந்துவருகிறோம்.” என்றார்.
