• Sat. Feb 15th, 2025

தமிழக காவல் துறையில் 28 மாவட்ட எஸ்.பிக்களுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து

ByIyamadurai

Jan 22, 2025

குரூப் 1 மூலம் தேர்வாகி தமிழ்நாடு காவல்துறையில் எஸ்.பியாக உள்ள 28 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ். அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் குரூப் 1 மூலம் டிஎஸ்பி.க்களாக பணியில் சேருகிறவர்கள் பதவி மூப்பு அடிப்படையில் எஸ்.பிக்களாக பணியாற்றும்போது அவர்களுக்கு
குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களுக்கு யுபிஎஸ்சி மூலம் தேர்வாகி ஐபிஎஸ் அதிகாரிகளாக
நியமிக்கப்படுகிறவர்களைப் போல, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அதிகாரிகளுக்கும் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்படுகிறது.

இதன்படி தமிழக காவல் துறையில் எஸ்.பியாக பணியாற்றும் 28 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கி ஏற்கனவே தமிழக அரசு அறிவிப்பு வெளிட்டிருந்தது. இந்த நிலையில் அந்த 28 எஸ்.பிகளுக்கும் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கியதற்கான ஆணையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இதுதொடர்பான அந்த ஆணையில் ஈஸ்வரன், மணி, செல்வக்குமார், டாக்டர் சுதாகர், எஸ்.ஆர்.செந்தில்குமார், முத்தரசி, பரோஸ்கான் அப்துல்லா, ராமகிருஷ்ணன், சக்திவேல், நாகஜோதி, சுகுமாரன், ராஜராஜன், விமலா, சுரேஷ்குமார், பாஸ்கரன், சண்முக பிரியா, ஜெயக்குமார், மயில்வாகணன், ஜெயலட்சுமி, சுந்தர வடிவேல், உமையாள், எஸ்.சரவணன், டி.செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, ராஜன், செல்வராஜ், ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.