• Sun. May 19th, 2024

மதுரையில் விமான சேவைகள் அடுத்து, அடுத்து ரத்து

Byவிஷா

May 8, 2024

எர் இந்தியா விமான சேவைகள் அடுத்தடுத்து ரத்து – 183 பயணிகளுடன் மதுரையிலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய பயணிகள் அவதி – ஏர் இந்தியா நிர்வாக ஊழியர்களிடம், பயணிகள் மூன்று மணி நேரத்துக்கு மேலாக வாக்குவாதம் செய்தனர்.
சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தினமும் விமான சேவை அளித்து வருகிறது. மதுரை விமான நிலையத்திலிருந்து பகல் 1.50 மணியளவில் புறப்பட்டு இரவு 9.00 மணி அளவில் சிங்கப்பூர் விமான நிலையம் சென்றடையும்.
நேற்று திருச்சி விமான நிலையத்திலிருந்து அதிகாலை சிங்கப்பூருக்கு கிளம்ப வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டதால், மதுரை விமான நிலையத்திலிருந்து கிளம்பும் விமானத்தில் அனுப்பி வைக்கிறோம் என்று, ஏர் இந்தியா நிர்வாகம் கூறி 83 பணிகளை மதுரை விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலை மதுரையில் இருந்து 90 பயணிகளும் திருச்சியில் இருந்து 93 பகுதிகளும் மொத்தம் 183 பயணிகளுடன் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டுதால், பயணிகள் அவதி அடைந்து வந்தனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள், பயணிகளிடம் எதுவும் தெரிவிக்காததால், பயணிகள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களிடம் மூன்று மணி நேரத்துக்கு மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் இருந்து வந்த 83 பயணிகளும் திருப்பி அனுப்பப்படுவதால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுவரை எர் இந்தியா நிர்வாகம் பயணிகளை தங்குவதற்கான தங்கும் இடம் பயண சீட்டின் பணத்தை திரும்ப பெறுவதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் தெரிவிக்காமல் இருப்பதால், பயணிகள் தொடர்ந்து ஏர் இந்தியா நிர்வாக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ,மதுரை விமான நிலையம் முழுவதும் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.
ஏர் இந்தியா நிறுவன பணிப்பெண்கள் வேலை நிறுத்தத்தால், இந்தியா முழுவதும் 12 மணி நேரத்தில் பல்வேறு நாடுகள் மற்றும் நகரங்களுக்கு செல்லும் 72க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமானங்கள் ரத்துசெய்யபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *