• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

திறமையான மாணவர்களுக்கு பயிற்சி உதவித்தொகை மற்றும் போட்டிகளுக்கான பிரத்யேக வசதிகள் அறிமுகம்!

BySeenu

Oct 8, 2026

​கோயம்புத்தூர் குமரகுரு கல்வி நிறுவன வளாகத்தில் 22,065 சதுர அடி பரப்பளவில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் (ITF) தரநிலைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட மூன்று புதிய டென்னிஸ் மைதானங்களுடன் கூடிய ‘குமரகுரு டென்னிஸ் அகாடமி’ மற்றும் மிட்ஃபீல்ட் விளையாட்டு வசதி திறந்து வைக்கப்பட்டது.

​மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முறையான டென்னிஸ் பயிற்சி, தொடர் பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் இந்த நவீன விளையாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அக்ரிலிக் தரைத்தளம், பிரத்யேக மைதான விளக்குகள், 12 அடி உயர வேலி, பயிற்சிச் சுவர் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இங்கு வாரத்தின் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை தொடர் பயிற்சி அமர்வுகள் நடைபெற உள்ளன.
​சிறப்பம்சமாக, திறமையுள்ள இளம் மாணவர் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘டென்னிஸ் ஆதரவு திட்டம்’ (Tennis Support Programme) அறிமுகப்படுத்தப்பட்டு பயிற்சி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்கமாக அக்டோபர் 7 முதல் 9-ஆம் தேதி வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கான திறந்தநிலை டென்னிஸ் போட்டி (Open Category Tennis Tournament 2026) நடத்தப்படுகிறது.

​இப்புதிய மையத்தை சென்னை ஐஐடி-யின் பேராசிரியர் மற்றும் டீன் டாக்டர் அஷ்வின் மகாலிங்கம் திறந்து வைத்தார். குமரகுரு நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்க, கோவை மாவட்ட டென்னிஸ் சங்கத்தின் பொருளாளர் நரேந்திர குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். சர்வதேச தரத்திலான இந்த உள்கட்டமைப்பு, கல்வி வளர்ச்சியோடு விளையாட்டுத் திறனையும் ஒருங்கிணைத்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.