

எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் (Emerald Jewel Industry India Limited) நிறுவனத்தின் பிரபல ரீட்டெய்ல் பிராண்டான ஜூவல்ஒன் (Jewel One), ஜீனா (ZHEENA) புதிய ஜெம் ஸ்டோன் கலெக்சனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் நிர்ஜரா வைர நகை கலெக்சனை அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய ஜீனா ஜெம் ஸ்டோன் கலெக்சன் லோகோவையும், நகைகளையும் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் K. சீனிவாசன், தலைமைச் செயல் அதிகாரி N. வைத்தீஸ்வரன் மற்றும் நிறுவனத்தின் அதிகாரிகள் மதுரையில் உள்ள ஜூவல்ஒன் கிளையில் மார்ச் 13ம் தேதி அறிமுகம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஜூவல்ஒன் வாடிக்கையாளர்களும், மற்ற முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
ஆசியாவின் மிகப் பெரிய அரிய நகைகளை வடிவமைக்கும் நிறுவனங்களில் ஒன்றாகிய எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அதிநவீன நகைத் தயாரிப்பு மையம் கோயம்புத்தூரில் இருக்கிறது. இங்குதான் நகை வடிவமைப்பில் மிகவும் அனுபவம் மிக்கவர்களால் கலைநயத்துடன் இந்த ஜெம் ஸ்டோன் கலெக்சன் உருவாக்கப்படுகின்றன.
புதிய கலெக்சனை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி பேசிய எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் K. சீனிவாசன் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி N. வைத்தீஸ்வரன் பேசுகையில் “எங்களுடைய புதிய கலெக்சனான ஜீனாவை பெருமையுடன் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். எங்களுடைய வெற்றிகரமான முந்தைய கலெக்சன்களான அயனா (Ayanaa), நிர்ஜராவைப் போலவே, மேலும் பல கலெக்சன்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். இதுபோன்ற இன்னும் பல கலெக்சன்களை தொடர்ந்து அறிமுகப்படுத்த உள்ளோம். ஜீனா கலெக்சன் என்பது 20-30% பாரம்பரிய வடிவமைப்பு முறை சார்ந்தும், 70-80% நவீன வடிவமைப்பு முறை சார்ந்தும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கலெக்சனில் நீண்ட ஆரங்கள், கழுத்தணிகள், சோக்கர்கள், வளையல்கள், காதணிகள், மோதிரங்கள் போன்றவை அடங்கும். இந்தக் கலெக்சன்கள் ரூ. 20,000-லிருந்து ரூ. 5 லட்சம் வரையிலான விலைகளில் கிடைக்கிறது.”
அரிய ஜெம் ஸ்டோன்களால் இந்த நகைகள் அழகுபடுத்தப்பட்டுள்ளன. ஜீனா என்பதற்கு பெர்சிய மொழியில் ‘துடிப்புமிக்கது’ என்று அர்த்தம். இந்தக் கலெக்சனின் குறியீடாக ‘ஜீனா: உங்களைப் போலவே துடிப்புமிக்க அழகு’ என்று உருவாக்கப்பட்டுள்ளது. திருமணங்கள், நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள், பார்ட்டி, அலுவலகம் ஆகிய இடங்களுக்கு அணிந்து செல்லக்கூடிய வகையில் இந்த நகைகள் கச்சிதமாகப் பொருந்தும். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள ஜூவல்ஒன் நிறுவனத்தின் 14 ஷோரூம்களிலும் இந்தக் கலெக்சன் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.





