• Fri. Mar 24th, 2023

கன்னியாகுமரி அருகே பெரியார் சிலை அவமதிப்பு..

Byகாயத்ரி

Mar 15, 2022

கன்னியாகுமரி மாவட்டம் ஒற்றையால்விளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் வெளிப்புற சுவரில் பெரியார், அண்ணா மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் உருவம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு வரையப்பட்டிருந்த பெரியார் படத்தின் மீது யாரோ சிலர் தார் பூசி அவமதித்துள்ளனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிவண்ணன் கன்னியாகுமரி போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியார் உருவப்படம் மீது தார்பூசி அவமதிப்பு செய்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி, அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *