• Thu. Apr 25th, 2024

காடு வா வா, வீடு போ போ எனும் வயதிலும் ரோஷமில்லாத அமைச்சர் துரைமுருகன் என செல்லூர் ராஜு பேட்டி

Byகுமார்

Nov 6, 2021

முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை பார்த்து, இதே போல கர்நாடகா அரசும் செயல்பட்டால், தமிழகத்தின் மொத்த நீராதாரமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது என அரசை எச்சரிக்கிறேன் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.

பெரியாறு அணை திறக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வருகிற நவம்பர் 9ஆம் தேதி அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மாவட்ட ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்று மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கோரிப்பாளையம் பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ பேசும்போது, முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க அனுமதி பெற்று தந்த ஜெயலலிதாவின் ஆன்மா திமுகவை மன்னிக்காது. தமிழர்களின் உரிமைகளை காக்க தவறிய திமுக அரசு கையாலாகாத அரசாக உள்ளது.

கேரள அரசை கேள்வி கேட்க ரோஷமில்லாத அமைச்சர் துரைமுருகன் தற்போது காமெடி செய்து கொண்டிருக்கிறார். காடு வா வா, வீடு போ போ எனும் வயதிலும் காழ்ப்புணர்வுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களை வசை பாடியுள்ளார். நாலாம் தர பேச்சாளர் போல பேசுகிறார் துரைமுருகன்.

அதிமுக அரசு ஏன் அணையை ஆய்வு செய்யவில்லை என்று கேள்வி கேட்க அவருக்கு அருகதை இல்லை.
அப்போது ஆய்வு செய்ய வேண்டிய தேவை இல்லை. இப்போது தான் அதற்கான தேவை இருக்கிறது.
2018- இல் இடுக்கி அணை திறக்கப்பட்ட விவகாரத்தில் கேரள அமைச்சர்கள் அத்துமீறி நடந்து கொண்ட போது தடுத்தது அதிமுக அரசு.

சுதந்திர இந்தியாவில் இன்னொரு மாநில விவகாரத்தில் இன்னொரு மாநிலம் தலையிட்டதாக வரலாறு உள்ளதா?
விதிப்படி தான் அணை திறக்கப்பட்டது என்றால், அதை ஏன் முன்கூட்டியே அறிவிக்கவில்லை? முதலமைச்சர் ஏன் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை?
மக்கள் திமுக அரசை இப்போது காறி துப்புகிறார்கள்.

முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை பார்த்து, இதே போல கர்நாடகா அரசும் செயல்பட்டால், தமிழகத்தின் மொத்த நீராதாரமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது என அரசை எச்சரிக்கிறேன் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *