• Fri. Apr 26th, 2024

தங்கச்சி மடத்தில் இலங்கை கடற்படையால் உயிரிழந்த மீனவர்களின் நினைவாக நினைவு சதுக்கம் அமைக்க கோரிக்கை

இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் இலங்கை கடற்படையால் உயிரிழந்த மீனவர்களின் நினைவாக தமிழக அரசு சார்பில் நினைவு சதுக்கம் அமைக்க வேண்டும்.பாம்பன் தீவுக்கவி அருளானந்தம் நினைவுக்கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் வலியுறுத்தல்.

நெய்தல் நிலத்தின் பெருந்தலைவரும், இந்திய-இலங்கை மீனவர்களுக்கு நட்புறவு பாலமாக விளங்கிய தீவுக்கவி யு.அருளானந்தம் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் இராமேஸ்வரம் – பாம்பன் பெரியநாயகி மகாலில் நவம்பர் 5 அன்று மிக சிறப்பாக நடைப்பெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் மீனவர் சங்க தலைவர்கள், மக்கள் இயக்க தலைவர்கள் பங்கு கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.

“நெய்தல் நிலத்தின் பெருந்தலைவர் நீவுக்கவி யு.அருளானந்தம் “என்ற நூலும்,
“நெய்தல் நதி தீவுக்கவி யு.அருளானந்தம்’ என்ற நூலும் இக்கூட்டத்தில் அவரது நினைவாக வெளியிடப்பட்டது.

நெய்தல் நிலத்தின் பெருந்தலைவர் தீவுக்கவி யு.அருளானந்தம் என்ற நூலை
தேசிய மீனவர் பேரவைத் தலைவர் திரு.இளங்கோ, அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் திரு.ஆன்றன் கோமஸ், மக்கள் கண்காணிப்பகம் தலைவர்.வழக்கறிஞர்.கென்றி திபேன் ஆகியோர் கூட்டாக வெளியிட நூலை மறைந்த அருளானந்தம் அவர்களின் சகோதரர் யு.இருதையம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

மீனவர் உரிமைக்கூட்டமைப்பு, பாம்பன் பரவர் நலப் பேரவை, சமம் குடிமக்கள் இயக்கம் மற்றும் அனைத்து மீனவர் சங்கங்கள் இணைந்து நடத்திய புகழ் அஞ்சலி கூடுகையை மீனவர் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் வழக்கறிஞர் சமம்.சி.சே.ராஜன் அவர்கள் ஒருங்கிணைத்தார்‌.
ஒருங்கிணைப்புக் குழுவில் பாம்பன்.கேவிஸ்டன், ஜே.அருளானந்தம்,
கனிஷ்டன், முடியப்பன், லிடிஸ், ரோவன் தல்மேதா போன்றோர் செயல்பட்டனர்.

மறைந்த அருளானந்தம் அவர்களின் உருவப்படத்திற்கு பாம்பன் பரவர்நலப்பேரவை தலைவர் திரு.எஸ்.ஏ.பவுல் மாலை அணிவித்தார். அதனை தொடர்ந்து மீனவர் சங்க தலைவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மீனவர் சங்கத்தலைவர் சேசுராஜ், எஸ்.பி.ராயப்பன்,பாம்பன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பேட்ரிக்,
மூக்கையூர் ஜான், இருதைய மேரி,
ராக்கினி, மகத்துவம், சைமன்,
ஜெரோம், வழக்கறிஞர் ஜான்சன், மற்றும் எழுத்தாளர். குறும்பனை பெர்லின்
பேரா.அந்தோனி ராஜ், அருட்தந்தை சர்சில், அருட்தந்தை பிரிட்டோ, ஹென்றிடிபேன், ஆண்டன் கோமஸ், இளங்கோ என பல்வேறு தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.

நவம்பர் 21 அகில உலக மீனவர் தினத்தனற்று தமிழகம் முழுவதும் தீவுக்கவி அவர்களை நினைவுக்கூறுவது என்றும்; மறைந்த தீவுக்கவி. அருளானந்தம் அவர்கள் எழுதி வெளி வராமல் இருக்கும் மீனவர் வரலாறு குறித்த நூலை முதல்வர் மற்றும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை கொண்டு வெளியிடுவது என்றும்;

திரு.அருளானந்தம் அவர்கள் பெயரில் பாம்பனில் நூலகம் துவங்கப்பட வேண்டும் என்றும்;

இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும்,மீனவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தமிழக அரசை வலியுறுத்துவது என்றும்;

இலங்கை கடற்படையால் உயிரிழந்த அனைத்து மீனவர்களின் நினைவாக நினைவுசதுக்கம் தங்கச்சி மடத்தில் அமைக்க அரசை வலியுறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது‌

மீனவர் உரிமைக்கூட்டமைப்பு சார்பில் ரோவன் தலாமேதா நன்றிக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *