


சர்வதேச மகளிர் தினவிழாவை முன்னிட்டு சிவகாசி அருகே உள்ள சத்திரப்பட்டி வஸ்த்ரா கல்விக்குழுமம் மற்றும் அன்பால் இணைவோம் அறக்கட்டளை, சிவகாசி இணைந்து கல்லூரி மாணவிகளுக்கு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது.

கல்விக்குழுமத்தின் முதல்வர் முனைவர். ராகவேந்திரன் மற்றும் இயக்குனர் திரு. சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அறக்கட்டளை நிறுவனர் & தலைமை இயக்குனர் & குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலக்குழு உறுப்பினர் க. சதீஷ்குமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இராஜமுருகன் பேப்பர் ஸ்டோர் த முருகன், திரு. சாந்ததீபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

மேலும், இந்நிகழ்வில், அன்பால் இணைவோம் அறக்கட்டளை உறுப்பினர்கள் செல்வகணேஷ், தினேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வினை தமிழ்த்துறை திருமதி. முத்துலெட்சுமி மற்றும் கீதா அவர்கள் ஒருங்கிணைத்தார்.இவ்விழாவினை, வஸ்த்ரா கல்லூரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்..

