

வேதாரண்யம் முல்லைப் பூவிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பால் விவசாயிகளை மகிழ்ச்சி: முல்லைப்பூ சாகுபடியை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுமென விவசாயிகள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்
வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேதாரண்யம் முல்லைப் பூவிற்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பால் நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டாரத்திற்கு உட்பட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேதாரண்யம் வட்டத்திற்குட்பட்ட பஞ்சநதிகுளம், ஆயக்காரன்புலம், மருதூர், ஆதனூர், நெய்விளக்கு, தானி கோட்டகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் முல்லை பூ உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


அப்பகுதியில் உள்ள விவசாயிகள் முல்லை பூ சாகுபடியை மட்டுமே நம்பி சுமார் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களுடைய வாழ்வாதார தேவையை பூர்த்தி செய்து வரும் நிலையில், தற்பொழுது புவிசார் குறியீடு பெற நடவடிக்கை என்ற அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து அரசு உதவிகள் செய்ய வேண்டும். மேலும் புவிசார் குறியீடு அறிவிப்பு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

