நீலகிரி மாவட்டம் கூடலூரில் மக்களை அச்சுறுத்திவந்த ‘டி23’ புலியை 18வது நாளாக வனத்துறையினர் தேடிவருகின்றனர்.
மரங்களின் மீது பரண்கள் அமைத்தும், இமேஜ் ட்ராப், ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டது. கூடலூரிலிருந்து புலி மசினகுடி நோக்கிச் சென்ற நிலையில், சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் கடந்த ஒரு வாரமாகத் தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். மேலும் உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த புலி ஒருவேளை இறந்திருக்கலாம் என வனப்பகுதியை ஒட்டியுள்ள நீர்நிலைப் பகுதிகளிலும் வனத்துறையினர் தேடுதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இப்புலியைக் கண்காணிக்க வைக்கப்பட்ட கேமராவில் 8 நாட்களுக்குப் பிறகு ஒம்பெட்டா வனப்பகுதியில் ‘டி23’ புலியின் உருவம் பதிவாகி உள்ளது. மீண்டும் புலி, தேவன் எஸ்டேட், மேல் பீல்டு பகுதிக்கு வரலாம் என்று கணித்துள்ள வனத்துறை, போஸ்பர பகுதியில் முகாமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.