• Fri. Mar 29th, 2024

மோடியால் ஈர்க்கப்பட்டு…டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் நபர்

Byadmin

Feb 8, 2022

கவுண்டமணி ஒரு திரைபடத்தில் எடுக்குறது பிச்சை இதுல எகத்தாலம் கேக்குதா என்று கூறுவார். அது போல உலகம் டிஜிட்டல் மயமாக மாறி வரும் நிலையில் மக்களும் அதற்கு ஏற்ப மாறிவருகின்றனர். முதலில் பணம் கொண்டு சென்றனர், பிறகு ஏடிஎம் கார்டு மூலம் பொருட்களை வாங்கி வந்தனர். தற்போது கூகிள் பே ,போன் பே யூபி ஐ மூலம் பண பரிவர்த்தனைசெய்து வருகின்றனர்.
சிறு குறு தொழில் செய்வோர் கூட இந்த டிஜிட்டல் முறைக்கு மாறி விட்டனர்.பலர் மாறினாலும் ஒரு சிலர் டிஜிட்டல் முறைக்கு மாறும் போது அது சற்று ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தி உள்ளது.

அப்படி தான் இங்கு ஒருவர் பிச்சை எடுப்பதற்கும் டிஜிட்டல் முறை வந்துவிட்டது. பீகாரின் பெட்டியா என்ற ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ராஜு பட்டேல் (51) என்பவர் வித்தியாசமான முறையில் பிச்சை எடுத்து வருகிறார். பிச்சை எடுக்கும் போது யாராவது சில்லறை இல்லை என்று சொன்னால் உடனே, “ஐயா போன் பே மூலம் தர்மம் செய்யுங்கள்” என்று கூறி கழுத்தில் தொங்கவிட்டிருக்கும் கியூஆர் கோடு அட்டையை தூக்கி காட்டுகிறார்.

லல்லு பிரசாத் யாதவின் ஆதரவாளரான ராஜு படேல், பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஈர்க்கப்பட்டு டிஜிட்டல் முறையில் யாசகம் பெறுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து கூறிய அவர் நான் சிறு வயதில் இருந்தே பிச்சை எடுத்து வருவதாகவும் . டிஜிட்டல் முறைக்கு தக்கபடி நானும் மாறிக்கொண்டதாகவும் அவர் கூறினார் மேலும் யாசகம் பெற்று முடித்த பிறகு ரயில் நிலையத்திலேயே படுத்துக்கொள்கிறேன். எனக்கு வாழ வேறு வழி தெரியாததால் யாசகம் செய்கிறேன்.

எனவே வங்கி கணக்கு ஒன்றும், இ-வேலட் ஒன்றும் திறந்துள்ளேன். எப்போதும் கியூஆர் கோடு அடங்கிய அட்டையை கழுத்தில் தொங்கவிட்டுக்கொள்வேன். வங்கி கணக்கு திறக்க ஆதார் கார்டு, பான் கார்டு தேவை என்று சொன்னார்கள். அதையும் வாங்கிக்கொண்டேன் ” என்றார்.

பிச்சை எடுப்பது குற்றம் என்று நீதிமன்றம் கூறினாலும் இந்திய பிரதமரால் ஈர்க்கப்பட்டு பிச்சை எடுப்பதாக ராஜூ படேல் கூறுவது ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டிய செயல் அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *