• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

இன்டிகோ விமானம் தரையிறங்காமல் சுற்றியது…

ByKalamegam Viswanathan

May 15, 2025

ஹைதராபாத்தில் இருந்து மதுரை வந்த இன்டிகோ விமானம் பலத்த காற்று, மழை காரணமாக 40 நிமிடம் தரையிறங்காமல் சுற்றியது. இரு குழந்தைகள் உள்பட147 பயணிகள் பத்திரமாக தரையிரங்கினர்.

மதுரை விமான நிலையத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பொழிந்து வரும் நிலையில், ஹைதராபாத்தில் மாலை 4.20மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மாலை 5.20 மணி வரும் இண்டிகோ விமானம், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததால் விமானம் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் 40 நிமிடங்களுக்கு மேல் சிவகங்கை, திருப்புவனம், திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதியில் வட்டம் அடித்தது. அதனை தொடர்ந்து மாலை 6.05. மணிக்கு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

தென்மாவட்டங்களில் மழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், கடந்த இரு நாட்களாக மாலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது.

திருபுவனம், திருமங்கலம், கள்ளிக்குடி போன்ற பகுதிகளில் விமானம் சுற்றியதால் பொதுமக்கள் ஆச்சரியமாகவும் விமானத்தை பார்த்தனர். இதனால் வேறு ஏதும் காரணமாக பீதியுடன் காணப்பட்டனர்.