• Wed. Apr 24th, 2024

உலகை கலக்கும் இந்தியாவின் டாப் பணக்காரர்கள்…

Byகாயத்ரி

Sep 27, 2022

தேங்காய் முதல் துறைமுகம் வரை தேவைகளை வியாபாரமாக மாற்றி அதில் கொடி கட்டி பறந்து, இவ்வுலகை கலக்கி வரும் இந்திய பணக்காரர்களை பற்றிய தொகுப்பு தான் இது…

இந்திய கோடீஸ்வர்கள் என்றாலே நம் நினவிற்கு வரும் பெயர்கள் அம்பானி, அதானி தான். ஏனென்றால் இவர்கள் ஏறாத உயரமும் இல்லை, இடம் பிடிக்காத தளமும் இல்லை என்று சொன்னால் மிகை ஆகாது. இவர்கள் மட்டுமில்லாமல் இன்னும் பல பேர் நம் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு ஆணி வேறாக இருந்து வருகின்றனர். அதில் அம்பானி மற்றும் அதானி இடையே அதிக போட்டிகள் நிலவி வரும்.

அந்த வகையில் இந்த வருடம் “ஃபோர்ப்ஸ்” வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் 152.8 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். ‘அதானி க்ரூப்’ உலக பணக்காரர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உலக அளவில் 2ம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி அதானி தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். அதானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் 70 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் அதிகரித்துள்ளது.இது இந்தியாவுக்கே பெருமை என பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் அதானி இந்தியாவின் டாப் 1 பணக்காரராக தற்போது இருந்து வருகிறார்.

2ம் இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார். இவரின் தற்போதைய சொத்து மதிப்பு 90.7 பில்லியன் அமெரிக்க டாலர். உலக பணக்காரர் பட்டியலில் இவருக்கு 10வது இடம் கிடைத்துள்ளது. மும்பையில் இவரின் ‘ஆன்டிலா’ எனும் வீடு மட்டுமே 15,000 கோடி செலவில் கட்டுப்பட்டுள்ளது. இவருக்கென ரிலையன்ஸ் நிறுவனத்தின் கீழ் ரிலையன்ஸ் ரீட்டெயில், ஜியோ, பெட்ரோலியம் என பல தொழில்களில் உயர்ந்து வருகிறார். ரிலையன்ஸ் என்ற பெயர் பட்டி தொட்டி எங்கும் பரவி நிற்க காரணம் அம்பானி தான்.

இந்திய பணக்காரர்களில் டாடா குழுமத்தின் முக்கிய பங்குதாரர்களான ஷபூர்ஜி பலூன்ஜி க்ரூப் இடம்பிடித்துள்ளது. சைரஸ் பாலோன்ஜி மிஸ்திரி மற்றும் ஷபூர் பாலோன்ஜி மிஸ்திரி இந்த குழுமத்தை நடத்தி வருகின்றனர். சைரஸ் மிஸ்திரி சமீபத்தில் நடந்த கார் விபத்தில் காலமானார். இந்த குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு 32 பில்லியன் அமெரிக்க டாலர். சைரஸ் மிஸ்திரி 2012-2016 வரை டாடா நிறவனத்தின் தலைவராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொழிலதிபரும் டி-மார்ட்ன் நிறுவனருமான ராதாகிஷன் டமானி பெரிய பணக்கார குடும்பத்தில் பிறக்காத, கல்லூரி படிப்பைக் கூட நிறைவு செய்யாதவர் இன்று இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக மிளிறுகிறார். இவர் ஜீரோவிலிருந்து ஹீரோவானவர். ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்து தற்போது 45 நகரங்களில் டி-மார்ட் என்று ஒலிக்க செய்தவர் இவர். இவரின் மொத்த சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது.

பல இளைஞர்களின் கனவு நிறுவனமான விப்ரோ நிறுவனம் (மென்பொருள் நிறுவனம்) இந்தியாவின் பணக்காரர்களில் 5வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைவரான அசிம் பிரேம்ஜி உலகமென்பொருள் துறையின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். அதுமட்டிமின்றி 2010 ஆம் ஆண்டில் ஆசியாவீக் எனும் இதழ் நடத்திய வாக்கெடுப்பில் உலகில் சக்திவாய்ந்த 20 மனிதர்களில் ஒருவராக அசிம் அறியப்படுகிறார். 1945ல் தொடங்கிய இந்த விப்ரோ வெஸ்டர்ன் இந்தியா வெஜிடபிள் பிராடக்ட்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டு பின்னர் பல தொழில்களை அரம்பித்தது. 1984ல் விப்ரோ மென்பொருள் நிறுவனமாக தொடங்கப்பட்டு பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 9.8 பில்லியன் அமெரிக்க டாலர்.

இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட்-ன் தலைவரும் சைரஸ் பூனாவாலா க்ரூப்ஸ்-ன் நிறுவனருமான சைரஸ் பூனாவாலாவும் இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபர். 1966ல் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறவனமான சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவப்பட்டது. இதன் மூலம் போலியோ, ஃப்ளூ போன்ற பல நோய்களுக்கு தடுப்பூசி தாயரித்து வருகிறது. சைரஸ் பூனாவாலாவின் சொத்து மதிப்பு 24.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சொல்லப்படுகிறது.

பிரபல மென்பொருள் நிறுவனமான HCL பல பேருக்கு நன்கு அறியப்பட்ட பெயர் தான். அந்நிறுவனத்தின் தலைவரும் நிறுவனருமானவர் சிவ நாடார். இந்திய டாப் தொழிலதிபர்கள் பட்டியலிலே இடம்பெற்ற முதல் தமிழ் தொழிலதிபர் என்ற பெருமையும் இவரையே சேரும். 1991ல் HCL மென்பொருள் நிறுவனமாக மாறியது. அதுவரை 1976ல் உருவாக்கப்பட்ட HCL, Research and development division of HCL, என்று இருந்தது. இதன் விளைவு தற்போது HCL 50 நாடுகளில் விரிவாக்கப்பட்டது. நிர்வாக பொறுப்பிலிருந்து சிவ நாடார் ஜூலை 19, 2021 பதவி விலகினார். ஆனாலும் அந்நிறுவனத்தின் கெளரவ தலைவராகவும், இயக்குநர் குழுவின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 28.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்து வருகிறது.

இப்படி இந்தியாவில் பல தொழிலதிபர்கள் பொருளாதாரத்தை சரியாமல் காத்து வருகின்றனர். இந்தியா எந்த வகையிலும் மற்ற நாடுகளை விட தரம் குறைந்தது அல்ல என்று அனைத்து தொழில் அதிபர்களும் நிரூபித்து வருகின்றனர். இன்று ஜெஃப் பெசோஸை தோற்கடித்த இந்தியன் நாளை எலான் மஸ்க்கையும் தோற்கடிக்க வாய்ப்புகள் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *