• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பொதுவெளியில் தோன்றினார் சீன அதிபர்

ByA.Tamilselvan

Sep 28, 2022

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சீன அதிபர்ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் வேகமாக தகவல் பரவியது. சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக இணையத்தில் பல பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்றுவிட்டு செப்டம்பர் 16-ம் தேதி பெய்ஜிங் திரும்பிய ஜி ஜின்பிங், விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பீஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றார். இதன்மூலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளதாக வெளியான வதந்திகளுக்கு அதிபர் ஜி ஜிங்பிங் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.