• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கிராமி விருது விழாவில் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்த்த இந்தியப் பெண்..!

Byவிஷா

Feb 7, 2023

அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இந்திய இசைக் கலைஞர் அனெட்பிலிப் காஞ்சிபுரம் பட்டுடுத்தி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட, அமெரிக்காவில் உள்ள பெர்க்லீ இசைக் கல்லூரியின் நிறுவனரான அனெட் பிலிப்பின் பெர்க்லீ இந்தியன் குழுமம், ஷ{ருஆத் என்ற தலைப்பில் உருவாக்கிய ஆல்பம் சிறந்த உலகளாவிய ஆல்பம் என்ற பிரிவில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு தனது குழுவினருடன் அனெட் பிலிப் சென்றிருந்தார். அப்போது, சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டு சேலையையும், தென்னிந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான நகைகளையும் அணிந்திருந்தார். தனது நாட்டையும், தனது கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ஆடை, அணிகலன்களை அணிவதில் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார். அனெட் பிலிப்பின் ஆல்பத்தில், ஷங்கர் மகாதேவன், உஸ்தாத் ஜாகிர் உசேன், ஸ்ரேயா கோஷல், விஜய் பிரகாஷ் உட்பட 98 பேர் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.