• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை..!

Byவிஷா

Nov 10, 2023

அமெரிக்காவில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இந்திய மாணவரான தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வருண் என்பவர் 2022 ஆம் ஆண்டு முதுகலை படிப்பில் சேர்ந்துள்ளார். வருண் ஜிம் போவதை வழக்கமாக வைத்திருந்தார். வழக்கம் போல் ஜிம்முக்கு சென்ற நிலையில் அங்கு வந்த ஜார்டன் என்ற நபர் வருணை கத்தியால் தலையில் குத்தியுள்ளார். இதில் உயிருக்கு போராடிய வருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து ஜார்டனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வருணை தனக்கு தெரியாது என்றும் அவரைப் பார்க்கும்போது வித்தியாசமாகவும் பயமாகவும் இருந்ததாகவும் தற்காப்புக்காகவே தன்னிடம் இருந்த கத்தியால் குத்தியதாகவும் கைது செய்யப்பட்ட ஜார்டன் கூறியுள்ளார்.