• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் ஆண்டு விழா..,

BySeenu

Oct 29, 2025

இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் 90 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவையில் சமூக பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வல பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..

கடந்த 1920 ல் இந்தியாவில் நிறுவப்பட்ட இந்திய செஞ்சிலுவை சங்கம் 1935 ஆம் ஆண்டு முதல் கோவையில் துவங்கி கோயம்புத்தூர் ரெட் கிராஸ் சொசைட்டியாக செயல் பட்டு வருகின்றது..

கடந்த 90 ஆண்டுகளாக பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும்,இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் 90 வது ஆண்டு விழா கோயம்புத்தூர் மாவட்டக் கிளை செஞ்சிலுவை சங்கம் சார்பாக கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..

IRCS கோவை மாவட்டக் கிளையின் தலைவர் டாக்டர். நந்தினி ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், IRCS கோவை மாவட்டக் கிளையின் துணைத் தலைவர் டாக்டர். பி.எம். முரளி அனைவரையும் வரவேற்று பேசினார்..,

விழாவில் சிறப்பு விருந்தினராக இடிகரை ஆதித்யா சர்வதேசப் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ விஜய் குணசேகரன் கலந்து கொண்டார்..

கவுரவ விருந்தினராக ரோட்டரி 3206 மாவட்ட ஆளுநர் செல்லா கே. ராகவேந்திரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் கல்லூரி முதல்வர்கள், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அதிகாரிகள் மற்றும் மாணவர் தன்னார்வலர்கள் உட்பட 26 கல்லூரிகளைச் சேர்ந்த 83 பிரதிநிதிகளுடன் மொத்தம் 21 வட்டமேசைப் பணியாளர்கள், ரோட்டரி உறுப்பினர்கள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கௌரவிக்கப்பட்டன. கூடுதலாக, கொரோனா காலத்தில் பணியாற்றிய 24 தன்னார்வலர்கள் அங்கீகரிக்கப்பட்டனர், மேலும் 128 உறுப்பினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் ரவுண்ட் டேபிள் மற்றும் ரோட்டரி,கல்லூரி நிறுவனங்கள்,கல்லூரி
முதல்வர்கள்,பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன..

IRCS கோவை மாவட்டக் கிளையின் நிர்வாகக் குழு உறுப்பினர் மோகன் சங்கர் விழா இறுதியில் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் கோவை கிளை ஹெட் பூங்கோதை கலந்து கொண்டார்..