• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய ஜோதிடர்கள் மாநாடு..,

BySeenu

Oct 29, 2025

தென்னிந்திய ஜோதிடர் நல சங்கத்தின் மாநாடு கோவையை அடுத்த முதலிபாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டப அரங்கில் நடைபெற்றது…

சங்கத்தின் சபை தலைவர் சமீல் முருகன் மற்றும் மாநில தலைவர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில், இதில்,ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆலோசகர் லயன் செந்தில் குமார் அனைவரையும் வரவேற்றார்..

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை ஆதீனம் ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்பிரான் சுவாமிகள்,பிரபல நடிகர் ராதாரவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்..

மாநாட்டில் தென்னிந்திய ஜோதிடர்கள் நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் ப்ரஸன்ன மணிகண்டன் தலைமையுரையாற்றினார்..

அப்போது பேசிய அவர்,
ஜோதிடர்களின் ஒற்றுமையே இந்த சங்கத்தின் பலம் என தெரிவித்த அவர்,
இந்த மாநாடு வெற்றி பெற உழைத்த சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்..

தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவியேற்பு,நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்,மற்றும் அடையாள அட்டை வழங்கி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ப்ரஸன்ன மணிகண்டன்,தலைமுறைகளாக இந்த துறையில் உள்ள ஜோதிடர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் தனி நல வாரியம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார்..

தொடர்ந்து பேசிய அவர் ஜோதிட கலையை விரிவுபடுத்தி இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் ஜோதிட கலை தொடர்பான பாடத்திட்டங்களுடன் கூடிய கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்..

விழாவில் கவுரவ அழைப்பாளர்களாக முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி தலைவர் வி.பி.கந்தவேல் திரைப்பட இயக்குனர் விஜய் ஸ்ரீ,வழக்கறிஞர் காசிமாயன், ஆகியோர் கலந்து கொண்டனர்..

நிகழ்ச்சியில் ,தென்னிந்திய ஜோதிடர் சங்கத்தின் கௌரவ தலைவர் காளிதாஸ்,செயலாளர் சுரேஷ்,பொருளாளர் கவிராஜ் குருசாமி ,அத்தாணி ஆனந்தன்,தஞ்சை முருகன்,சங்ககிரி செந்தில் குமார்,கணேசன்,பார்த்திபன் ,மற்றும் பல்வேறு நிலை நிர்வாகிகள் திங்களூர் சிவக்குமார்,தனபால்,மங்களபுரம் செந்தில் குமார்,ஒருவந்தூர் சிவக்குமார்,கோவை சின்னதுரை,சாய் செந்தி்ல்,ஸ்ரீசாய் சரவணா,கிருஷ்ணன் பெரியசாமி, தங்கதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்..

நிகழ்ச்சியில் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஜோதிடர்கள் கலந்து கொண்டனர்..