• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

பிரிட்டன் ராணி எலிசபெத் இறுதிச்சடங்கில் இந்திய ஜனாதிபதி பங்கேற்பு

ByA.Tamilselvan

Sep 14, 2022

மறைந்த பிரட்டன் ராணியிந் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில் இந்தி ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்கிறார்.
பிரிட்டன் ராணி எலிசபெத் கடந்த 8ம் தேதி காலமானார். கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டு, அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்குபல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தினர். எடின்பெர்க் தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எலிசபெத் ராணியின் உடல் இன்று லண்டனை சென்றடைந்தது. எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்கு வரும் 19ம் தேதி வெஸ்ட்மினிஸ்டர் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்க உள்ளார்.