• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கபடி விளையாடி அசத்தும் இந்திய ராணுவ வீரர்கள்..

Byகாயத்ரி

Mar 13, 2022

எல்லை காவல் வீரர்களான, ராணுவ வீரர்கள் ஓய்வு நேரத்தில் கபடி விளையாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடும் வெயில், பனி, கொட்டும் மழைக்கு இடையே எல்லையில் நின்று காவல் காத்து வருகின்றனர் ராணுவ வீரர்கள். அந்த வகையில், இமாச்சலபிரதேசத்தில் உள்ள இமயமலை எல்லையில் இந்தோ திபெத்திய எல்லை காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.தற்போது அவ்விடங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் அதற்கு ஏற்ற ஆடைகளை அணிந்தப்படியே வீரர்கள் உள்ளனர். இந்நிலையில் கடும் பனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஹிம்வீர்ஸ் என்றழைக்கப்படும் இமயமலை வீரர்கள், ஓய்வு நேரத்தில் கபடி விளையாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் இமயமலையில் கம்பளி ஆடைகளை அணிந்துகொண்டு கபடி விளையாடும் வீடியோ அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.