இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை புதிய உட்சம் அடைந்து வருகிறது. இந்தியாவில் மட்டும்தான் இந்த விலை உயர்வா? இல்லை உலக நாடுகளிலும் இதே நிலைதானா? என்ற சந்தேகம் ஒவ்வோருவர் மனதிலும் இருக்கும். அதக்கான விடை இங்கே…
உலகிலேயே அதிகபட்சமாக ஹாங்காங்கில் 1 லிட்டர் பெட்ரோல் விலை சுமார் ரூ.200க்கு விற்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் 109 ரூபாயை தாண்டி பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனால் சில நாடுகளில் ஒற்றை இலக்கத்தில் கூட பெட்ரோல் விலை இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளின் வரிசையில் இந்தியா பெட்ரோல் விலை 53வது இடத்தில் உள்ளது, ஆனால் ஆசியாவில் இந்தியாதான் முதல் இடம்.
ஒரு சில நாடுகளில் பெட்ரோல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. உலக அளவில் ஹாங்காங்கில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.198 ஆகவும், நெதர்லாந்தில் ரூ. 172 ஆகவும், நார்வேவில் ரூ.170 ஆகவும்,
டென்மார்க்கில் ரூ.162 ஆகவும் விற்பனை ஆகிறது.
இதுவே ஆசிய அளவில் பார்த்தால், இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஜப்பானில் ரூ. 93 ஆகவும், சீனாவில் ரூ. 84 ஆகவும், வங்கதேசத்தில் ரூ. 77 ஆகவும், இந்தோனேஷியாவில் ரூ. 60 ஆகவும்,
இலங்கையில் ரூ. 68 ஆகவும், பாகிஸ்தானில் ரூ. 59 ஆகவும், மலேசியாவில் ரூ. 37 ஆகவும் உள்ளது.
ஏன் இந்த விலை ஏற்றம் என்று பார்த்தால், பிற நாடுகளில் பெட்ரோல் விலை என்பது கச்சா எண்ணெய் இறக்குமதி, நாட்டின் வரி விகிதங்கள், பொருளாதார வளர்ச்சி என பல காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் எப்போதும் பெட்ரோலிய பொருட்கள் குறைவாகவே இருந்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக உள்ளது.
ஒன்றிய அரசின் அபரிமிதமான வரி விதிப்பும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
அதே வேளையில் உலகிலேயே மிக குறைவாக 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 1.5 காசுகளை வெனிசுலா நாட்டில் விற்கப்படுகிறது. ஈரானில் 5 ரூபாய்க்கும் சிரியாவில் 17 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் 21 நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 50க்கும் கீழேயே உள்ளது.
எனவே நமது அரசு மனதுவைத்தால் நமது நாட்டிலும் பெட்ரோல் விலையை கண்டிப்பாக குறைக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.