தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தோர் விவரங்கள் குறித்து தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 990 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,03,613 ஆக உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 1,153 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் இன்று மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,136 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 28 மாவட்டங்களில் புதிதாக எந்த ஒரு உயிரிழப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளது.