• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கே.ஆர்.பி.அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.., 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

Byவிஷா

Oct 11, 2023

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மழை பொலிவு அதிகமாக இருக்கும் போது, கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும், அதன்படி, கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியைத் தாண்டி உள்ளது. இந்த நிலையில், கடலூர் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கே.ஆர்.பி. அணை நிரம்பிய நிலையில், நீர்வரத்து 1,176 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கரையோரத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றின் கரையை மக்கள் யாரும் கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், மக்கள் தங்களது கால்நடைகளை ஆற்றின் கரையோரம் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும், ஆற்றினுள் யாரும் இறங்க வேண்டாம் என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.