தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகலவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழக அரசு ஊழியர்களுக்கு அகலவிலைப்படி ஆனது 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அக விலைப்படி உயர்வானது நிதியாண்டு தொடக்கமான ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெற இருக்கிறார்கள்.