குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக செலவினங்களுக்கு மானியம் ரூ.13 கோடியாக முதல்வர் ஸ்டாலின் உயர்த்தி உள்ளார்.
குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக செலவினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த அரசு மானியத்தொகை ரூ. 8 கோடியில் இருந்து ரூ. 13 கோடியாக உயர்த்தி வழங்கிட ஆணை பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர் பாபு அவர்களுக்கும், நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னையில் அவரது இல்லத்தில் அமைச்சர் சேகர் பாபு அவர்களை, நேரில் சந்தித்து குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் நன்றி தெரிவித்துக் கொண்டார். அருகில் விளையாட்டு மேம்பாட்டு அணி நாகர்கோயில் மாநகர நிர்வாகிகள் வக்கீல் ராமதாஸ், மால்டன் ஜெனின் உள்ளனர்.