• Tue. Jul 15th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

Byவிஷா

Mar 29, 2024

நான்கு நிதியாண்டுகளாக முறையாக வரி செலுத்தாததால், 1700 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பது அக்கட்சியனரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியை மத்திய வருமானவரித்துறை அனைத்துப் புறங்களில் இருந்தும் கிடுக்கிப்பிடி போட்டு வருகிறது. அந்தக் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி தேர்தல் செலவுகளை செய்ய விடாமல் வருமான வரித்துறை தடுக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்தும் காங்கிரஸ் கட்சிக்கு நிதி செல்லாமல் தடுத்து நிறுத்தியதும் வருமான வரித்துறையின் செயலே என்று காங்கிரஸ் கட்சியால் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கி அதிலிருந்து ரூ.135 கோடியை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது.
தற்போது அடுத்தகட்டமாக காங்கிரஸ{க்கு அதிர்ச்சி வைத்தியத்தை வருமானவரித்துறை அளித்துள்ளது. நான்காண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சி வருமான வரியை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதற்காக 1700 கோடி ரூபாயை வட்டியுடன் அபராதமாக செலுத்த வேண்டும் என்று தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2017 – 18 ம் நிதி ஆண்டிலிருந்து 2021 – 22 நிதியாண்டு வரையிலான நான்காண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் முறையான வருமான வரி செலுத்தப்படவில்லை. அதனால் வட்டியுடன் அபராதமாக ரூபாய் 1700 கோடியை காங்கிரஸ் கட்சி செலுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. வருமான வரித்துறையின் இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் காங்கிரஸ் கட்சி பொருளாதார ரீதியாக முடக்கப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.