• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

விசிக.வுக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சூர்யா குடும்பம்

Byவிஷா

Mar 29, 2024

நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தியின் தந்தையான நடிகர் சிவக்குமார் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் ரவிக்குமார் வெற்றி பெற அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலம் தனித்து நின்றாலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ரவிக்குமார் போன்றவர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்துபார்லிமெண்ட்டுக்கு அனுப்ப வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ஜெய்பீம் படத்தின்போது சூர்யாவுக்கு எதிராக பாமக கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்த வேளையில் நடிகர் சூர்யாவின் குடும்பத்துக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இருந்தது. இத்தகைய சூழலில் நடிகர் சிவக்குமார் விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.