• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இன்று மாலை பாஜக நிர்வாகிகளுடன் மோடி கலந்துரையாடல்

Byவிஷா

Mar 29, 2024

இன்று மாலை 5.00 மணிக்கு ‘நமோ செயலி’ மூலம் பாஜக நிர்வாகிகளுடன், ‘எனது பூத் வலிமையான பூத்’ என்னும் தலைப்பில், பிரதமர் மோடி கலந்துரையாடப் போவதாக தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்,
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
எங்களின் கடின உழைப்பாளர்களுடன் இன்று ஒரு உரையாடலான ‘எனது பூத் வலிமையான பூத்’ என்னும் தலைப்பில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் இன்று மாலை 5 மணிக்கு உரையாட நான் காத்திருக்கிறேன்.
தமிழக நிர்வாகிகள் மக்கள் மத்தியில் பணியாற்றும் விதமும், பா.ஜ.க அரசின் சாதனைகளை மாநிலம் முழுவதும் உறுதியுடன் தெரிவிப்பதும் பாராட்டுக்குரியது.
தி.மு.க.,வின் தவறான ஆட்சியால் தமிழகம் சோர்ந்து போய் உள்ளதையும், பா.ஜ.க.,வை தமிழக மக்கள் நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள் என்பதும் உண்மைதான் என பதிவிட்டுள்ளார்.