• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சென்னை OPPO நிறுவனத்தில் அதிரடியாக வருமான வரித்துறை சோதனை..

Byகாயத்ரி

Dec 22, 2021

செல்போன் விற்பனை செய்யும் OPPO நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை ஓஎம்ஆர் சாலை கொட்டிவாக்கத்தில் உள்ள ஓப்போ மொபைல் நிறுவன தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.OPPO நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகவும், முறையாக வருவாய் காட்ட வில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரியவந்தது.

இதன் முக்கிய பகுதியாக சென்னை பழைய மகாபலிபுரம் சாலை கொட்டிவாக்கம், நேரு நகரில் உள்ள OPPO நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சுமார் 15 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அங்கு 5 துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் 9 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

OPPO நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதால் நேற்று காலை, வழக்கம்போல் பணிக்கு வந்த சுமார் 60 ஊழியர்களை உள்ளே வைத்து மாலை 6.45 மணி அளவில் வெளியே அனுப்பினர்.
நேற்று காலையிலிருந்து நடைபெற்று வரும் இந்த சோதனையானது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் என தெரியவந்துள்ளது.