• Wed. Oct 14th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தேனியில் அ.தி.மு.க., உட்கட்சி தேர்தல் துவங்கியது

தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் நகர், பேரூராட்சி வார்டுகள் மற்றும் கிளை பொறுப்பாளர்களுக்கான உட்கட்சி தேர்தல் இன்றும் (டிச. 2.2), நாளையும் (டிச.23) நடை பெற உள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (டிச.21) பழனிச்செட்டிபட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.


இக்கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர்கள் ஜக்கையன், கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளார் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து, பேசியதாவது;
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., காலம் முதல் இப்போது வரை கட்சியில் தொண்டர்களே தலைவர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். ஒருங்கிணைப்பாளராக நானும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் உங்களால் தேர்வு செய்யப்பட்டோம்.

இதே போல் தேனி மாவட்ட கட்சி அமைப்பு தேர்தல் இரு நாட்கள் நடைபெறும். தேர்தல் நடத்துவதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் வந்துள்ளனர். அவர்களின் மேற்பார்வையில் தான் உட்கட்சி தேர்தல் நடைபெறும், என்றார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.