• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மகதி என்ற மக்கள் கண்காணிப்புத் திட்டத்தின் தொடக்க விழா!

Byஜெ.துரை

Apr 16, 2026

“மகதி” என்ற மக்கள் கண்காணிப்புத் திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

சென்னை வேங்கைவாசல் ஐந்தாவது வார்டில் முதற்கட்டமாகச் இந்த மகதி செயலி செயல்படுத்தப்பட உள்ளது.

மகதி செயலியின் அறிமுக விழா குறித்தான செய்தியாளர் சந்திப்பு சென்னை மேடவாக்கம், வேங்கைவாசலில் நடைபெற்றது.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மகதி நிருவனர் மற்றும் செயல் அதிகாரி செந்தில் ராஜா கூறியதாவது,

ஜனநாயகத்தில் பொதுமக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இல்லாமல், அதிகாரத்தைக் கண்காணிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

முற்றிலும் அரசியல் சார்பற்ற மற்றும் வணிக நோக்கமற்ற இந்தத் திட்டம், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மிக எளிதாகப் பதிவு செய்ய வழி எனஇத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களாக,பொதுமக்கள் வெறும் ஒரு நிமிடத்திற்குள் தங்கள் புகார்களைப் பதிவு செய்துவிட முடியும்.

எழுதப் படிக்கத் தெரியாத சாமானிய மக்களுக்காக, பிரத்யேகமாக குரல் வழி புகார் அளிக்கும் வசதி,புகார்தாரரின் அடையாளம் எங்கும் வெளிப்படுத்தப்படாது என்பதால், மக்கள் தயக்கமின்றித் தங்கள் தொகுதிப் பிரச்சினைகளைப் பேச முடியும்.

இதன் மூலம் மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு நேரடித் தொடர்பும், நல்லிணக்கமான உறவும் ஏற்படும் என்று தெரிவித்தார்.