• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோவை ஆல் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தொடக்க விழா..,

BySeenu

Aug 8, 2026

​தமிழ்நாடு ஆல் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் (TADSA) சார்பில், கோவையில் உள்ள இன்ஃபினிட்டி டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமியில், 17வது தேசிய டான்ஸ் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான முன்னோட்ட பத்திரிகையாளர் சந்திப்பும், கோயம்புத்தூர் ஆல் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனின் தொடக்க விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

​தமிழகத்தில் இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள இந்த 17வது தேசிய டான்ஸ் ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து நிகழ்வில் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், டான்ஸ் ஸ்போர்ட்ஸ் உலகளவில் வளர்ச்சி பெற்று வரும் விளையாட்டாகவும், ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெற்றுள்ள நடன வகைகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

​குறிப்பாக, ‘பிரேக்கிங்’ (Break Dance) மற்றும் ‘லேட்டின் & ஸ்டாண்டர்ட் டான்ஸ் ஸ்போர்ட்ஸ்’ உள்ளிட்ட சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரிவுகள் குறித்து நேரடி செய்முறைப் பயிற்சியுடன் (Demonstration) விளக்கமளித்தனர். இதில் பங்கேற்ற வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி, டான்ஸ் ஸ்போர்ட்ஸின் நுட்பங்கள் மற்றும் போட்டி விதிமுறைகளை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

​தமிழகத்தில் டான்ஸ் ஸ்போர்ட்ஸை மேலும் வளர்த்தெடுத்து, இளைஞர்களை சர்வதேச அளவிலான போட்டிகளுக்குத் தயார்படுத்தும் நோக்கில் பல்வேறு பயிற்சி முகாம்கள் மற்றும் மாநில, தேசிய அளவிலான போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு ஆல் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

​இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆல் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கோயம்புத்தூர் ஆல் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷனின் தலைவர் திருமதி சாதனா, செயலாளர் திரு தீபன் வெங்கட் குமார் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.